புதுச்சேரி அடுத்த காரைக்காலில் நடைபெற்ற கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலத்தில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவின் 202-வது ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது.