வீட்டின் முன்பு அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம். சடலத்தை பார்த்து கதிகலங்கி நின்ற பொதுமக்கள். பக்கத்து வீட்டுக்காரர் சொன்ன ஒற்றை விஷயத்தை வைத்து துப்பு துலக்கிய போலீஸ். அடுத்தடுத்த விசாரணையில் காத்திருந்த மெகா ட்விஸ்ட். நண்பனை அடித்தே கொன்று, சடலத்தை வீட்டின் அருகிலேயே ஒன்றரை அடி ஆழத்திற்கு குழி தோண்டி புதைத்த பயங்கரம். நண்பனை கொலை செய்ததற்கு என்ன காரணம்? நடந்தது என்ன?19ஆம் தேதி அதிகாலை. வீட்டு வாசல தண்ணி தெளிச்சு கோலம் போட்டுட்டுருந்தாங்க சில பெண்கள். ஆண்கள் சிலர் வாசல உள்ள திண்ணையில உக்காந்து நியூஸ் பேப்பர் படிச்சிட்டு இருந்துருக்காங்க. இப்படி வழக்கம்போல அமைதியா இருந்த அந்த கிராமம், கொஞ்ச நேரத்துலேயே பதட்டமா மாறிருக்கு. அதே கிராமத்துல உள்ள சென்னகேசவன்-ங்குற நபர் கத்தி கூப்பாடு போட்டுக்கிட்டே ஓடி வந்துருக்காரு. சென்னகேசவன் பதற்றமா ஓடி வர்றத பாத்த மக்கள், என்னாச்சு, எதுக்கு யா இப்படி ஓடி வரன்னு கேட்டுருக்காங்க. அப்ப, என் வீட்டு வாசல் முன்னாடி யாரோ, ஒரு ஆணோட டெட்பாடிய வீசிட்டு போயிருக்காங்கன்னு சொல்லி எல்லாரையும் பதற வச்சிருக்காரு. சென்னகேசவன் சொன்னத கேட்டதும், அங்க இருந்த மக்கள் அவரோட வீட்டுக்கிட்ட போய் பாத்துருக்காங்க.அப்போ, அங்க ஒரு ஆண் அழுகிய நிலையில, இருந்தத பாத்து அரண்டு போய் நின்னுருக்காங்க. அடுத்து, அந்த டெட்பாடிய பாத்து பதறிப்போன அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க, போலீஸுக்கு ஃபோன் பண்ணி தகவல் சொல்லியிருக்காங்க. உடனே ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ், இறந்து கிடக்குறது யாரு.? அவரு எப்படி உயிரிழந்தாரு.? டெட்பாடிய யாரு சென்னகேசவன் வீட்டு முன்னாடி போட்டதுன்னு கண்டுபிடிக்க விசாரணையில இறங்குனாங்க. அந்த சடலத்தோட உடம்புல எங்கேயும் ரத்தக்காயமே இல்லாததால, ஒருவேளை ஓவர் குடிபோதையில மூச்சுத்திணறி இறந்திருப்பாரோன்னு சந்தேகப்பட்ட போலீஸ், அந்த கோணத்துல விசாரணைய ஆரம்பிச்சாங்க. அப்படியே, டெப்பாடிய பக்கத்துல உள்ள கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலுக்கு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க.அதுல, அந்த நபர் மதுபோதையில இறக்கல, யாரோ கழுத்த நெரிச்சு கொலை பண்ணிருக்குறது போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் மூலமா போலீஸுக்கு தெரியவந்துருக்கு. யாரு அவர கழுத்த நெரிச்சு கொலை பண்ணதுங்குறது தெரியணும்னா, முதல அந்த நபர் யாருன்னு தெரியணும். அப்பதான், அவர யாரு கொலை செஞ்சு, சென்னகேசவன் வீட்டு முன்னாடி போட்டதுன்னு தெரியும்னு சொல்லி, அந்த ஏரியாவுல உள்ள சிசிடிவி கேமராக்கள செக் பண்ணாங்க.அந்தநேரம், அங்க வந்த 60 வயசு மதிக்கத்தக்க நபர் ஒருத்தரு, சார் உயிரிழந்தவன் பேரு கணேசனும், அவன் சென்னகேசவனோட தோஸ்து-னும் சொல்லிருக்காரு. அதுக்குப்பிறகு, சென்னகேசவன பிடிச்சு தோண்டி துருவ ஆரம்பிச்சாங்க போலீஸ். அதுலதான், சென்னகேசவன், போலீஸ்காரங்ககிட்டையும், கிராம மக்கள்கிட்டையும் பக்காவ நாடகமாடி ஒரு கொடூர கொலைய மறைக்க போட்ட சதி திட்டம் வெளிச்சத்துக்கு வந்து அதிரவச்சுருக்கு.கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை பக்கத்துல உள்ள கல்லாவி பகுதிய சேர்ந்தவர் கணேசன். இவரோட மனைவி கல்பனா. இந்த தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்காங்க. கடந்த 20 வருஷமா தனியார் நிறுவனத்துல வேலை பாத்துட்டு இருந்த கணேசனுக்கு, மனைவி கல்பனாவோட நடத்தையில சந்தேகம் ஏற்பட்டுருக்கு. இந்த சந்தேகத்தால, மனைவி கல்பனாவ கொடூரமான முறையில கொலை செஞ்சுருக்காரு கணேசன். கடந்த 2014-ல மனைவி கல்பனாவ கார்ல கூப்பிட்டுக்கிட்டு ஆந்திராவுக்கு போன கணேசன், அங்க தன்னோட நண்பர்களோட சேர்ந்து கல்பனாவ அரிவளால வெட்டி கொலை செஞ்சது மட்டுமில்லாம, சடலத்த பெட்ரோல் ஊத்தி எரிச்சிருக்காரு. இந்த கொலை சம்பந்தமா கணேசன் அரெஸ்ட் பண்ண போலீஸ் அவர சிறையில அடைச்சிட்டாங்க. அதுக்குப்பிறகு, 2015-ல ஜாமீன்ல வெளியே வந்த கணேசன், நேரா தன்னோட வீட்டுக்கு போயிருக்காரு. தாய் கல்பனாவ, தந்தை கணேசனே கொலை செஞ்சதால அவரு மேல கொலைவெறில இருந்த மகனும், மகளும் எங்களுக்கு அப்பாவே வேண்டாம்ன்னு சொல்லிட்டு தொகரப்பள்ளில உள்ள தங்களோட பாட்டி வீட்டுக்கு போய் செட்டிலாகிட்டாங்க. ஜாமின்ல வந்த பிறகு யாரும் இல்லாம தனிமரமா இருந்த கணேசன், வேலை தேடி சென்னைக்கு வந்துருக்காரு. கிண்டியில ஒரு வீட்ட வாடகைக்கு எடுத்து கூலி வேலை செஞ்சிட்டு இருந்த கணேசன், விடுமுறை நாட்கள சொந்த ஊருக்கு போயிட்டு வர்றத வழக்கமா வச்சிருந்துருக்காரு. அப்படி ஊருக்கு போறப்பலாம், தனியார் நிறுவனத்துல வேலை பாத்துட்டு இருக்கும்போது பழக்கமான நண்பன் சென்னகேசவன் வீட்டுக்கு போய் ரெண்டு, மூணு நாள் தங்குவாராம். சென்னகேசவனுக்கு பர்கூர்ல உள்ள BRG மாதேப்பள்ளிதான் சொந்த கிராமம். மனைவி சுமதிக்கூட ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டால, சென்னகேசவனும் தனியாதான் வாழ்ந்துட்டு இருந்துருக்கான்.இந்த சூழல்லதான், சென்னையில வேலை பாத்துட்டு இருந்த கணேசன், BRG மாதேப்பள்ளில உள்ள சென்னகேசவன் வீட்டுக்கு போயிருக்காரு. கடந்த 16ஆம் தேதி காலையில இருந்தே சரக்கு அடிக்க ஆரம்பிச்ச கணேசனும், சென்னகேசவனும் சாயங்காலம் 7 மணிக்கு கடைக்கு போய் ரெண்டு பிரியாணி பொட்டலத்தையும் ரெண்டு குவாட்டர்களையும் வீட்டுக்கு வாங்கிட்டு போயிருக்காங்க. கணேசன் சரக்கடிச்சிக்கிட்டே பிரியாணி சாப்பிட்டுட்டு இருக்கும்போது, கொஞ்ச பிரியாணி தரையில சிந்திருக்குது. அத பாத்த சென்னகேசவன், ஒழுங்க சாப்பிட மாட்டியா, கீழே சிந்தி வீட்ட குப்பையாக்குனா, காலையில யார் சுத்தம் பண்ணுவா, நான் தானே பண்ணனும்னு சொல்லி திட்டிருக்காரு. அப்ப, போதையில இருந்த கணேசனும் கூட கூட பேசுனதால ரெண்டு பேருக்கும் இடையில வாக்குவாதம் முற்றிருக்கு. அப்ப, கணேசன் கன்னத்துலேயே சென்னகேசவன் ஒரு அறை விட்டுருக்கான். ஏற்கனவே மதுபோதையில நிதானம் இல்லாம இருந்த கணேசன் ஒரே அடியில சுருண்டு விழுந்துருக்காரு. கீழ விழுந்த கணேசன் பக்கத்துல போன சென்னகேசவன், என்கிட்டே நடிக்கிறியான்னு சொல்லி கணேசனோட நெஞ்சு மேல காலாலேயே எட்டி எட்டி உதைச்சிருக்காரு. அப்ப, கணேசன்கிட்ட இருந்து எந்த அசைவும் இல்லாதத கவனிச்ச சென்னகேசவனுக்கு அடிச்ச போதையும் தெளிஞ்சிருச்சு. கணேசன் உயிரிழந்துட்டாருன்னு தெரிஞ்சதும் பதறிப்போன சென்னகேசவன் என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்துருக்கான்.அதுக்குப்பிறகு, நடுராத்திரி 12 மணியளவுல, வீட்டு வளாகத்துலேயே ஒன்றரை அடிக்கு குழி தோண்டுன சென்னகேசவன், கணேசோட சடலத்த அந்த குழிக்குள்ள போட்டு புதைச்சிட்டு, மறுநாள் வழக்கம்போல இருந்துருக்கான். இதுக்கு இடையில, 18ஆம் தேதி ஒரு மணி நேரத்துக்கு மேல பெஞ்ச கனமழையால, ஒன்றரை அடி மட்டுமே தோண்டி புதைக்கப்பட்டிருந்த கணேசனோட உடல் வெளியே தெரிஞ்சுருக்குது. அதோட, துர்நாற்றமும் வீச ஆரம்பிச்சிருக்கு. அத பாத்ததும் பதற்றமான சென்னகேசவன், குழிக்குள்ள இருந்த கணேசனோட சடலத்த எடுத்துட்டு வந்து தன்னோட வீட்டு வாசல போட்டுருக்கான். அதுக்கப்புறம், கிராம மக்களுக்கு சந்தேகம் வரக்கூடாதுங்குறதுக்காக, யாரோ, ஒரு ஆண் சடலத்த என்னோட வீட்டு வாசல வீசிட்டு போயிருக்காங்கன்னு சொல்லி நாடகமாடிருக்கான். சென்னகேசவன் பிடிச்சு கவனிக்க வேண்டிய விதத்துல கவனிச்ச பிறகுதான் இந்த கொடூர சம்பவமே தெரியவந்துச்சு. அடுத்து, கொலையாளி சென்னகேசவன் மேல கொலை வழக்குப்பதிவு செஞ்ச போலீஸ், அவன அரெஸ்ட் பண்ணி கம்பி எண்ண வச்சிருக்காங்க. இதையும் பாருங்கள் - வன்கொடுமை செய்து சிறுமி கொ*ல, கனமழையால் வெளியே தெரிந்த 'சடலம்' | CrimeNews | LatestNews