சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனிப் பெருவிழாவை முன்னிட்டு, ஆயிரத்து 8 திருவிளக்கு பூஜை வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக மூலவர் வெட்டுடையார் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. அதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.