Also Watch
Read this
By: Web Team

நாகை மாவட்டத்தில் பெய்த கனமழையால், வடக்காலத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் மூவாயிரம் ஏக்கர் சம்பா, தாளடி நெற் பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகி மிதக்க தொடங்கியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். பயிர்கள் முளைத்து 40 முதல் 50 நாட்கள் ஆன நிலையில், முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அழுகி சேதமடைந்தன. வடிகால்வாய்களில் தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் வாய்க்கால் தண்ணீரும் வயல்களில் நிரம்பியதாக குற்றம் சாட்டிய விவசாயிகள் இந்த ஆண்டு சம்பா, தாளடி சாகுபடியே இல்லாமல் போய்விட்டாதாக கவலை தெரிவித்தனர். ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ததாக தெரிவித்த விவசாயிகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved