விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நேரிட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் பலத்த காயமடைந்தனர். அரியலூரை சேர்ந்த அலெக்ஸ், நண்பர் அருணாச்சலத்துடன் இரு சக்கர வாகனத்தில் சென்னைக்கு வந்தபோது, கர்ணாவூர்பாட்டை அருகே நடந்து சென்ற ராஜன் என்பவர் மீது மோதி தூக்கி வீசப்பட்டதில் அலெக்ஸ் உயிரிழந்தார். மற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்