கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். முன்னதாக வேனில் இருந்தவர்கள் பத்திரமாக இறங்கியதால் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் திருப்பூரை சேர்ந்தவர்கள் என்பதும், குளித்தலை அருகே நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது வேனில் தீப்பற்றியதும் தெரியவந்தது.