கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இளைஞர் கொலை வழக்கில் என்எல்சி மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெய்வேலி என்எல்சி சுரங்க மண் மேட்டில் கடந்த ஜூன் மாதம், சிவசங்கரன் என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக கூறி அங்கு பணியாற்றிய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் அவரது உடலை சாலைக்கு எடுத்து வந்தனர். சிவசங்கரன் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்த போலீசார் என்எல்சி மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்களான மனோஜ், அங்கிட் சிங் ஆகியோரை கைது செய்துள்ளனர்.