மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் பகுதியில் பெண்களுக்கான புதிய மதரஸா திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகை மும்தாஜ், கண்ணீர் மல்க பேசினார். தன்னை நிறைய பேர் திட்டி இருப்பீர்கள் என்றும், நிறைய பேர் துவா செய்திருப்பீர்கள் எனவும் கண் கலங்கியபடி கூறியவர், தற்போது உங்கள் முன்னே இஸ்லாமிய பெண்ணாக நின்று கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.