புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்திப்பதற்கு புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கைதிகளை சந்திக்க ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும், ஒரு நேரத்தில் ஒரு கைதியை மட்டுமே சந்திக்க அனுமதி, இண்டர்காம் மூலம் மட்டுமே பேச அனுமதி உள்ளிட்ட புதிய நடைமுறைகள் புழல் சிறையில் அமல்படுத்தப்பட்டுள்ளன.