கன்னியாகுமரி மாவட்டம் கல்லுக்கூட்டம் பகுதியில் தேவாலய கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்தி சீல் வைக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள் தேவாலய மாடியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வரைபட அனுமதியை மீறி பெரிய அளவில் தேவாலய கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாக எழுந்த புகாரின் பேரில் நீதிமன்ற உத்தரவுப்படி அடிகாரிகள்சீல் வைக்க வந்தனர். அப்போது பொதுமக்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டு தற்கொலை மிரட்டல் விடுத்த நிலையில், தற்காலிகமாக தேவாலயத்திற்கு சீல் வைக்கும் நடவடிக்கையை கைவிட்டுச் சென்றனர்.