திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இருந்து பெங்களூருக்கு கூடுதலாக புதிய பேருந்து சேவையை ஆரணி எம்பி தரணிவேந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.வந்தவாசியில் இருந்து ஆரணி, வேலூர் வழியாக பெங்களூருக்கு காலையில் ஒரு பேருந்தும் மாலையில் ஒரு பேருந்தும் இயக்கப்பட்டு வருகிறது.இந்தநிலையில், அந்த வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை வந்தவாசியில் இருந்து ஆரணி எம்பி தரணிவேந்தன் கொடியை அசைத்து துவக்கி வைக்க, வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமார் பேருந்து சிறிது தூரம் ஓட்டினார்.புதிய பேருந்து சேவைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.