நெல்லை மாநகரத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளில் பாய்ந்தோடிய வெள்ளம் வீடுகள் மற்றும் கடைகளுக்குள்ளும் புகுந்தது. மேலும், நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தை சுற்றி 2 அடிக்கு மேல் மழைநீர் சூழ்ந்துள்ளதால், பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.