Also Watch
Read this
மக்களவையில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி அடைந்தது தமிழ்நாட்டுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். தேர்தலுக்கு முன்பே NDA கூட்டணி மண்ணைக் கவ்வியதாக சாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆணவ பாஜகவினுடைய வீழ்ச்சியை தமிழ்நாடு தொடங்கி வைத்துள்ளதாக சூளுரைத்தார்.

முதல்வர் வாக்கு சேகரிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில், திமுக கூட்டணியின் 7 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;
வெற்றிச் செய்தியோடு வெடியை போட்டுவிட்டு தான் இங்கு வந்திருக்கிறேன். தேர்தலுக்கு முன்பே நாடாளுமன்றத்தில் தே.ஜ.கூட்டணி மண்ணை கவ்வி உள்ளது.

இனிமேலாவது தமிழ்நாட்டை தேவையில்லாமல் சீண்டிப் பார்க்காதீர்கள். தமிழ்நாட்டில் சட்டம் கொண்டுவந்தால் அசால்டாக இருந்து விடுவோம் என நினைத்தார்கள். ஆனால், தமிழ்நாட்டில் எல்லோரும் அலர்ட்டாகத் தான் இருப்போம். கருஞ்சட்டைப் படை காவிப்படையை வீழ்த்தி உள்ளது. கருப்பு சட்டத்துக்கு எதிராக வாக்களித்த அனைத்து எம்.பி.க்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இபிஎஸ் நிலைப்பாடு என்ன?
திருவள்ளுவருக்கு காவி சாயம், மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவற்றில் பழனிசாமி நிலைப்பாடு என்ன?. என்.டி.ஏ கூட்டணி வெற்றிபெற்றால் அதிமுக ஆட்சி தான் அமையும் என பாஜக தலைவர்கள் வாக்குறுதி அளிப்பார்களா?. பாஜக கொண்டு வந்துள்ள குற்றவியல் சட்டங்களின் பெயரை தமிழ்நாட்டில் யாராவது சொல்ல முடியுமா? நீட் விலக்கு அளித்தால்தான் கூட்டணி என பாஜகவிடம் கூற முடியுமா?

பெரியாரை பாஜக தலைவர்கள் அவமதிக்கிறார்களே அதற்கு உங்கள் பதில் என்ன? தொகுதி வரையறையை 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க பாஜகவிடம் பழனிசாமி கோரிக்கை வைத்தாரா? பாஜக அரசின் இந்தி திணிப்பை எதிர்க்காத பழனிசாமி தமிழரா?. அதிமுகவின் அடிப்படையையே மறுக்கும் ஒரு கட்சியுடன் பழனிசாமி கூட்டணி வைத்துள்ளதற்கு பெயர் என்ன?
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசி, வாக்கு சேகரித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved