அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறுமிகளின் நடனம் கோயிலுக்கு வந்த பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது. முன்னதாக சாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.