திருக்கோவிலூர் அருகே தனியார் சர்க்கரை ஆலை மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் தங்க நகைகள், 350 கிராம் வெள்ளி கொலுசு, 2 லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் மொகலார் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் மணலூர்பேட்டையில் வாடகை வீட்டில் தங்கி பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில், சக்திவேலின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 18 சவரன் தங்க நகை, 2 லட்சம் ரொக்க பணம், 350 கிராமம் வெள்ளி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.இது குறித்து திருக்கோவிலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.