news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நகைக்காக மூதாட்டி கொ* - தாய், மகள் கைது
tv

Also Watch

tv

Read this

நகைக்காக மூதாட்டி கொ* - தாய், மகள் கைது

திருச்சுழி, விருதுநகர்

35

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே நகைக்காக மூதாட்டியை கொன்று, காட்டுப் பகுதியில் உடலை வீசிய பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுப நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, மூதாட்டியை பைக்கில் ஏற்றிச் சென்று, காட்டுப்பகுதியில் வைத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்த தாய் - மகள் கைது செய்யப்பட்டனர்.

சுப நிகழ்ச்சிக்கு சென்றவர்
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே பண்ணை மூன்றடைப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி, 62 வயதான அம்பிகா. இவர் கடந்த மார்ச்.8ஆம் தேதி, காரியாபட்டி அருகே உள்ள சித்து மூன்றடைப்பு கிராமத்திற்கு ஒரு சுப நிகழ்ச்சிக்கு சென்றவர், அன்று மதியம் முதல் காணாமல் போனார். அவரது உறவினர்கள் அம்பிகாவை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காணாமல் போனதாக கூறப்படும் மூதாட்டி அம்பிகாவை திருச்சுழி போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

சடலமாக கிடந்த அதிர்ச்சி
இந்நிலையில், திருச்சுழியில் இருந்து காரியாபட்டி செல்லும் சாலையில் புலிக்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே உள்ள காட்டுப் பகுதியில், மூதாட்டி ஒருவரின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து தகவல் அறிந்த திருச்சுழி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பார்த்த போது சடலமாக கிடந்தது மூதாட்டியான அம்பிகா என தெரிய வந்தது. இதனையடுத்து மூதாட்டி அம்பிகா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

சிசிடிவி காட்சி சிக்கியது
இந்த நிலையில், இந்த கொலைச் சம்பவம் குறித்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி  கண்காணிப்பு கேமரா பதிவுக் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது கொலை செய்யப்பட்ட மூதாட்டியை இருசக்கர வாகனத்தில் நடுவில் அமர வைத்து இரண்டு பெண்கள் ஏற்றி சென்றது பதிவாகி இருந்தது. இதனையடுத்து திருச்சுழி இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தொடர் விசாரணை நடத்தி, கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் மூதாட்டி கொலை வழக்கில் காரியாபட்டி அருகேயுள்ள எஸ்.தோப்பூர் பகுதியை சேர்ந்த தாய் மற்றும் மகளான லோகாம்பாள் மற்றும் அவரது மகளான 17 வயது சிறுமி ஆகியோரை திருச்சுழி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதிர்ச்சி, பயங்கரம்
திருச்சுழி போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில், மூதாட்டியான அம்பிகா சம்பவத்தன்று சித்து மூன்றடைப்பு பகுதியில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றதாக கூறப்படும் நிலையில், அந்த வழியாக டூவீலரில் வந்த லோகாம்பாள் மற்றும் அவரது மகளும் மூதாட்டியை நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இறக்கி விடுவதாக கூறி, நைசாக பேசி டூவீலரில் ஏற்றி அழைத்து சென்றுள்ளனர்.

நகைக்காக அவரை கொலை செய்து திருச்சுழி அருகே காட்டுப்பகுதியில் உடலை வீசி விட்டு அங்கிருந்து தாயும் - மகளும் தப்பி சென்றதாக, திடுக்கிடும் தகவல் வெளியானது. மூதாட்டியை நகைக்காக கொலை செய்த லோகாம்பாள் மற்றும் அவரது மகள் 17 வயது சிறுமி ஆகிய இருவரையும் கைது செய்த திருச்சுழி போலீசார் அவர்களிடம் இருந்து சுமார் 4 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.


Related Link

"சிலிண்டர் தட்டுப்பாட்டைச் சரிசெய்க"


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோடை வெயிலுக்கு இதுவரை 109 பேர் பலி

1
44 mins agoshare
Summer








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved