கன்னியாகுமரி சுற்றுலா தலத்தில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்குவது போல் நடித்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக தாய், மகள், மருமகள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். சுற்றுலாப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சென்ற 3 பெண்கள், ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி கல்லாவில் இருந்த பணம் மற்றும் பொருட்களை திருடியதாக கூறப்படுகிறது.