சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை கட்டுமானப் பணி நடைபெற்று வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் "மெடி கேர் என்விரான்மென்டல் பிரைவேட் லிமிடெட்" என்கிற மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை அமைப்பது தொடர்பாக நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆலை அமைக்கப்படாது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஆலை கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.