news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அடிக்கடி நிகழும் சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை வேண்டும்
tv

Also Watch

tv

Read this

அடிக்கடி நிகழும் சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை வேண்டும்

மேட்டமலை, விருதுநகர்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சாலை மறியல்

சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை வேண்டும் : 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருக மேட்டமலை கிராமம் உள்ளது தனி பஞ்சாயத்து கிராமமாக செயல்படும் இந்த கிராமத்தில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட
குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும்பாலும் பட்டாசு ஆலை தொழிலாளர்களாகவே இருந்து வருகின்றனர்.

இந்த கிராமத்தின் நடுவில் சாத்தூரில் இருந்து சிவகாசி செல்லும் பிரதான சாலை செல்கிறது. இந்த சாலையின் இரு புறங்களிலும் மேட்டமலை கிராமம் அமைந்துள்ளது

இந்நிலையில் மேட்டமலையின் அருகில் உள்ள எட்டூர்வட்டம் மற்றும் குமாரலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் போது சாத்தூர் சிவகாசி மெயின் ரோட்டில் வந்து சேரும் வழியில் எந்த விதமான எச்சரிக்கை பலகைகளோ வேகத்தடை (ஸ்பீடு பிரேக்கர், பேரிகார்டு ) உள்ளிட்ட ஏதும் இல்லாத காரணத்தினாலும்.

இரவு நேரங்களில் சாலையில் செல்லும் வாகனங்கள் தெரியும்படியான மின்விளக்கு அமைப்புகளோ எதுவும் இல்லாத நிலையில் இப்பகுதியில் அடிக்கடி வாகன
விபத்துக்கள் ஏற்படுவதுடன் உயிரிழப்புகளும் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (சிசிடிவி ) செயல்படவில்லை என்பன
உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி இப்பகுதியில் மேட்டமலை கிராமத்தைச் சேர்ந்த ராஜ் என்பவர் சாலை விபத்து ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் மேலும் அவரது உடல் இன்று மேட்டமலைக்கு கொண்டுவரப்பட்டது

இந்நிலையில் மேட்டமலை கிராம பொதுமக்கள் அடிக்கடி விபத்து நிகழும் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்க
வேண்டும் என்றும் இரவு நேரங்களில் மின்கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என்றும்.

செயல்படாமல் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை சரி செய்து தர வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சாத்தூர் சிவகாசி செல்லும் சாலையில் ஏராளமான வாகனங்கள் வரிசையில் நின்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் நகர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்ச வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Link
வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு பணம் தர மறுப்பு

வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு பணம் தர மறுப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதலாக 12.5% வரி

0
12 mins agoshare
உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதலாக 12








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved