Also Watch
Read this
By: Manigandan Raja

டிப்பர் லாரி மோதி விபத்து :
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வில்லிசேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் நாகராஜ் (65) இவர் வில்லிசேரியில் உள்ள லட்சுமி
நகர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது கோவில்பட்டி மறவர் காலனி மேட்டுத் தெருவைச் சார்ந்த காளிப்பாண்டி மகன் சங்கர்(40) வில்லசேரி பகுதியில் லாரியில் கொண்டு சென்ற கல்களை தட்டி
விட்டு கயத்தாறை நோக்கி வந்து கொண்டிருந்தார் அப்போது முன்னாள் சென்ற நாகராஜ் மீது பின்புறமாக லாரி மோதியதில் லாரியின் சக்கரங்கள் நாகராஜ் மீது ஏரி
இறங்கியது இதில் கை மற்றும் கால்கள் சிதைந்தனர்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு வில்லிசேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர் மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டியில் உள்ள
தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் இருப்பினும் சிகிச்சை பெற்று வந்த நாகராஜ் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக கயத்தாறு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் நடந்து சென்ற முதியவர் மீது லாரி மோதி உயிர் பலி ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved