Also Watch
Read this
By: Manigandan Raja

கடையின் முன்பு பேனர் :
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை அருகே நூர் அரிசி கடை முன்பு தவெக நிர்வாகி தனது மகளின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக பதாகை மற்றும் பந்தல்
அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடையின் உரிமையாளர் கடையின் முன்பு பேனர் வைக்க கூடாது என்று கூறியும் கேட்காமல் அரிசி கடை உரிமையாளரை தகாத வார்த்தையால் திட்டியதாகவும் கட்டையால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது,
இந்த நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் சமாதானம் செய்தும் கேட்காமல் கடையின் உரிமையாளரை மீண்டும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் இரண்டு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர், இதுகுறித்து காவல்துறையினர் இரு தரப்பினர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved