Also Watch
Read this
By: Manigandan Raja

ரேஷன் அரிசி மூட்டைகள் :
சேலம் மாவட்டம் எடப்பாடி நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் ரேஷன் கடை முன்பு அமர்ந்தும் தெருக்களில் சென்றும் பொதுமக்களிடம் இருந்து ரேசன் அரிசி
வாங்கும் வியாபாரிகள் ரேசன் அரிசியை வாங்கி கடத்துவதாக தொடர் புகார் வந்த வண்ணமுள்ளது.
இந்த நிலையில் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட சின்னமணலி மாரியம்மன் கோயில் பின்புறம் ஒன்பது மூட்டைகளில் சுமார் 500 கிலோ ரேஷன் அரிசியை அப்பகுதியில்
உள்ள பொதுமக்களிடம் வியாபாரிகள் வாங்கி அடுக்கி வைத்திருப்பதாக அப்பகுதி மக்கள் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த வட்ட வழங்கல் அலுவலர் கவிதா மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கேப்பாரற்று அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்களை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அப்பகுதியில் ரேஷன் அரிசி கொண்டு வந்து வைத்தது யார் ? என்பது குறித்து வட்ட வழங்கல் அலுவலர் விசாரித்து வருகின்றனர்.
எடப்பாடி நகரப்பகுதியில் பட்டபகலிலேயே சுமார் 500 கிலோ ரேசன் அரிசி மூட்டைகள் வீதியில் கேப்பாரற்று கிடந்ததை வட்டவழங்கல் அதிககாரி பறிமுதல் செய்த
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved