கொடைக்கானல் வத்தலகுண்டு பிரதான மலைச்சாலையில் அரசு பேருந்து மீது மாருதி ஆம்னி வேன் மோதிய விபத்தில், அதனை ஓட்டி வந்த பழ வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். கொடைக்கானலில் இருந்து மதுரை சென்ற பேருந்து மச்சூர் அருகே இறக்கமான சாலையில் சென்று கொண்டிருந்த போது, பழ வியாபாரி உசைன் என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்த மாருதி ஆம்னி வேன் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த உசைன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.இதையும் படியுங்கள் : கூமாபட்டி குறித்து விருதுநகர் EX.,ஆட்சியர் ஜெயசீலன் பதிவு... அழுத்தமான நகர்ப்புற வாழ்வியலில் இருந்து இளைப்பாற ஏற்ற இடம்