கூமாபட்டி கிராமத்தின் தற்போதைய புகைப்படங்களை பகிர்ந்து விருதுநகர் ஆட்சியராக பணிபுரிந்து வந்த ஜெயசீலன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் கூமாபட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் போட்டதை தொடர்ந்து பலரும் கூமாபட்டிக்கு படை எடுத்தனர். இந்தநிலையில் விருதுநகர் ஆட்சியராக இருந்த ஜெயசீலன் தனது எக்ஸ் பதிவில், அழுத்தமான நகர்ப்புற வாழ்வியலில் இருந்து இளைப்பாற கூமாபட்டி ஏற்ற இடம் என்றும், ஆனால் அந்நபரின் மற்ற தகவல்கள் 'ரீல்'ஸ்காக மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளார்.இதையும் படியுங்கள் : தண்டவாளம் உடைந்து சேதம்: ரயில் போக்குவரத்து பாதிப்பு... மின்சார ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு