Also Watch
Read this
By: Web Team

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரில் மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில் கிராம மக்கள் ஏராளமானோர் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
மேளதாளம் முழங்க வலம் வந்த தேரின் பின்னால் வந்த பக்தர்கள், கும்பிடு சரணம் என்ற முறையில் தரையில் விழுந்து எழுந்து கும்பிட்டபடி நேர்த்திக்கடன் செலுத்தினர். ரத வீதிகளில் தேரில் எழுந்தருளி அருள்பாலித்த மாரியம்மனை திரளான மக்கள் தரிசித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved