சென்னை திருவல்லிக்கேணி SBI வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரின் கைரேகையை வைத்து, ஆதார் மூலம் அவரை உறுதிப்படுத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். கடந்த 15-ம் தேதி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்த நிலையில், அவர் வாய் பேச முடியாத, காது கேளாத நபர் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் கொள்ளையனின் விவரங்களை அறிய போலீசார் முயற்சித்து வருகின்றனர்.