சென்னை எழும்பூரில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க் நிறுவனத்தில் ஓணம் பண்டிகையை மாணவர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.நிறுவனத்தின் மாணவர் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பாக ஓணம் கொண்டாட்டம் நடைபெற்றது.இதில் பெண்கள் கேரள புடவை அணிந்தும், மாணவர்கள் வேஷ்டி சட்டை அணிந்தும் செண்டை மேள இசைக்கு உற்சாகமாக நடனமாடினர்.மேலும் ஓணம் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற பூக்கோல போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.