செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே மனைவியின் செல்போன் எப்போதும் பிசியாகவே இருந்ததால், சந்தேகமடைந்த கணவர், கோயிலுக்கு அழைத்து செல்வதாக கூறி, மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உருகி உருகி காதலித்து திருமணம் செய்தது, இப்படி ஊருக்கு ஒதுக்குப்புறமாக வைத்து கழுத்தறுத்து கொலை செய்வதற்கு தானா என ஊரார் கரித்துக் கொட்டும் உத்தம காதலன்... செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த சிலாவட்டம் பகுதியை சேர்ந்தவர் சரண். 24 வயதே ஆன சரணுக்கும் பக்கத்துவீட்டை சேர்ந்த 19 வயதான மதுமிதாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரது காதலால் இருவீட்டாரும் முட்டி மோதிக்கொண்ட நிலையில், வீட்டைவிட்டு வெளியேறிய இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன் காதும் காதும் வைத்தாற்போல கோயிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.மீசை கூட முளைக்காத சரணும் கல்லூரி படிப்பை கூட முடிக்காத மதுமிதாவும் தன்னந்தனியே மதுராந்தகம் பகுதி அருகே வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். ஒழுங்காக வேலைக்கு கூட செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றித்திரிந்த சரண், மதுமிதாவுக்கு தெரியாமல் கஞ்சா விற்பது, வழிப்பறி செய்வது என குற்றச்செயல்களில் ஈடுபட்டு, வீட்டுச் செலவுக்கு பணம் கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி 4 முறை பல வழக்குகளில் சிறை சென்று வந்ததாகவும் தெரிகிறது.இந்நிலையில், வெளியூருக்கு சென்ற சரண், காதல் மனைவி மதுமிதாவுக்கு கால் செய்த போது Second Line-ல் சென்றதால் ஆத்திரமடைந்ததாக சொல்லப்படுகிறது. அப்போதும் விடாப்பிடியாக மதுமிதாவை அழைத்துக் கொண்டே இருந்த சரண், Busy... Busy என வந்து கொண்டே இருந்ததால் கோபமடைந்து, தன் மனைவி யாருடனோ தொடர்பில் இருப்பதாக சந்தேகித்துள்ளான்.அன்றைய தினமே புத்தம் புது கத்தியை வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்த சரண், மதுமிதாவிடம் ஏன் அழைப்பை எடுக்கவில்லை? என கேட்டதாக தெரிகிறது. தனது தோழியிடம் பேசிக் கொண்டிருந்ததாக மதுமிதா விளக்கமளித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனை நம்பாத சரண், மலைக்கோயிலுக்கு செல்லலாம் என கூறி மதுமிதாவை அழைத்துள்ளார். காதல் கணவன் அழைத்ததால் சிட்டென கிளம்பி ரெடியான மதுமிதா, சரணுடன் அனந்தமங்கலத்தில் உள்ள கோயிலுக்கும் சென்றுள்ளார்.மலை உச்சிக்கு சென்ற சரண், தாம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, கொலை செய்துள்ளார். ஆசை ஆசையாய் காதலித்து மணந்த மனைவி என்று கூட பாராமல் சந்தேக புத்தியால் கொடூரமான முறையில் மதுமிதாவை கொலை செய்த சரண், போலீசில் சரணடைந்துள்ளார்.இதையும் பாருங்கள் - தமிழகத்தை உலுக்கிய பள்ளி மாணவி கொ*ல, கொந்தளிக்கும் உறவினர்கள்| Rameshwaram News | LoveIssue