நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தைகள் சர்வ சாதரணமாக உலா வந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், அரவேனு பெரியார் நகர் பகுதியில் அதிகாலையில் இரண்டு சிறுத்தைகள் மற்றும் ஒரு கருஞ்சிறுத்தை சாலையில் சர்வ சாதாரணமாக உலா வந்தன. இதனால் அச்சமடைந்துள்ள மக்கள் வனத்துறையினர், சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.