நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆன்லைன் ரம்மியால் சட்டக் கல்லூரி தற்காலிக ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வி.நகர் பகுதியை சேர்ந்த அருணாச்சலம் ஆன்லைன் ரம்மி விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்த நிலையில், உறவினர்கள் நண்பர்களிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி இழந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.