விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயிலில், நவராத்திரி விழாவையொட்டி குத்து விளக்கு பூஜை செய்து பெண்கள் தரிசனம் செய்தனர். பந்தல்குடி அன்பு மாடல் நகரில் உள்ள ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில் பெண் பக்தர்கள் கலந்து கொண்டு 108 விளக்கு சிறப்பு பூஜை செய்தனர். இதனை தொடர்ந்து, திரளான பக்தர்கள் பக்தி கீர்த்தனைகளை பாடியபடி சாய்பாபாவை தரிசித்தனர்.