விசிகவின் மது ஒழிப்பு மாநாடு என்பது சட்டமன்ற தேர்தலுக்கு பேரம் பேசுவது அல்லது திமுகவை மிரட்டும் தொனியாகக் கூட இருக்கலாம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். கோவை தெப்பக்குளம் மைதானத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் மது ஆலைகளை நடத்துபவர்களே திமுகவின் பெரிய நிர்வாகிகள் தான் என்றார்.