திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள கோவில்பதாகை ஏரி நிரம்பி வெளியேறிவரும் உபரிநீரில் சிறுவர்கள் குளியல் போட்டும், மீன்பிடித்தும் விளையாடி வருகின்றனர். கோவில்பதாகை ஏரியின் உபரிநீர் கணபதி அவென்யூ வழியாக வெளியேறி வருவதால் குடியிருப்புகளை மார்பளவு தண்ணீர் சூழ்ந்துள்ளதோடு, ஆவடி - செங்குன்றம் சாலையில் இடுப்பளவு தண்ணீர் செல்வதால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளனூர், மோரை, கண்ணியம்மன் நகர், அரக்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றி சொந்த ஊர்களுக்கு செல்லும் சூழல் உருவாகி உள்ளது.