news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தமிழகத்தை உலுக்கிய கொடநாடு வழக்கு
tv

Also Watch

tv

Read this

தமிழகத்தை உலுக்கிய கொடநாடு வழக்கு

உதகை

31

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஏன் இந்த தாமதம்? எதற்காக இந்த வழக்கு நிலுவையில் உள்ளது? என்று, சரமாரியாக நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

விசாரணைக்கு வந்த வழக்கு
குஜராத் மாநிலத்தில் இருந்து தொலைபேசி உரையாடல்கள் குறித்த அறிக்கை வர கால தாமதம் ஆவதாக அரசு தரப்பு பதில் தெரிவித்தது. உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று மார்ச் 6ஆம் தேதி, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு, அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோரும் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான காவல்துறையினரும் ஆஜராகினர்.

நீதிபதி கேள்வி
இன்று நடைபெற்ற வழக்கு, மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஏன் இந்த தாமதம்? என்று, நீதிபதி முரளிதரன் அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து, பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கனகராஜ் தலைமையிலான குழு, இதற்கு பதில் கூறியது.

இதுவரை 289 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளது. மேலும், எதற்காக இந்த வழக்கு நிலுவையில் உள்ளது? என்று, நீதிபதி கேள்வி எழுப்பியதை தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் தொலைபேசி உரையாடல்கள் குறித்து தடயவியல் அறிக்கை வர வேண்டி உள்ளது என அரசுத் தரப்பு வழக்கிறஞர்கள் கூறினர். இதையெல்லாம் குறித்துக் கொண்ட மாவட்ட அமர்வு நீதிபதி முரளிதரன் வழக்கை எதிர்வரும் ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, உத்தரவிட்டார்.

Related Link
வைரல் ஆன விஜய், திரிஷா

வைரல் ஆன விஜய், திரிஷா

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
6 hrs 2 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved