ஏராளமான ரயில் விபத்துகள் நடந்து பல உயிர்கள் பறிபோனபோதும் மத்திய அரசு எந்த பாடமும் கற்கவில்லை என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மைசூரு-தர்பங்கா ரயில் விபத்து, ஒடிசாவின் பாலாசோர் ரயில் விபத்தை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்துக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், இந்த அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.