திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவில் உச்சிக்கால பூஜை முடிந்த பின் மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று கையில் மஞ்சள் நிற கயிற்றை கட்டி விரதத்தை துவங்கினர். விழாவின் முக்கிய நிகழ்வுகளான சூரசம்ஹாரம் 7 ஆம் தேியும், முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் 8 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.