ஜல்லிக்கட்டு போட்டி : இந்த ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் இரண்டாவது ஜல்லிக்கட்டு நிகழ்வாக இது குறிப்பிடப்படுகிறது. போட்டி நடைபெறும் இடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து பார்வையிட்டு வருகின்றனர். போட்டியை மாவட்ட கோட்டாட்சியர் நித்தியா மாடுபிடி வீரர்களுடன் உறுதிமொழி ஏற்று, கொடி அசைத்து தொடங்கி வைத்தார். வீரர்கள் அனைவரும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். இந்த போட்டியில் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கரூர், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 700 காளைகள் களமிறக்கப்பட்டுள்ளன. மேலும் 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பிறகே களத்தில் அனுமதி வழங்கப்படுகிறது. போட்டி பல சுற்றுகளாக நடைபெற்று வரும் நிலையில், களத்தில் சிறப்பாக ஆடும் காளைகளுக்கும், திறமையாக மாடுபிடிக்கும் வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன. சைக்கிள், கட்டில், குவளை, சேர்கள், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் ஏற்பாட்டாளர்கள் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஒன்றாக திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டு கருதப்படுகிறது. முன்னதாக மாதாகோட்டையில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு நடைபெற்ற நிலையில், தற்போது இரண்டாவது நிகழ்வாக திருக்கானூர்பட்டியில் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. Related Link நடை பயிற்சியின் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த பேராயர்