news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இன்றைய உலக நிகழ்வுகள்
tv

Also Watch

tv

Read this

இன்றைய உலக நிகழ்வுகள்

World news

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
உலக செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ட்ரோன் தாக்குதல் :

உக்ரைனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. கீவ் நகருக்கு அருகிலுள்ள ஒபுகிவ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது ரஷ்ய ட்ரோன் மோதி வெடித்து சிதறியதில் தீ விபத்து ஏற்பட்டது.

நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரஷ்யாவின் தொடர் தாக்குதலால் உக்ரைன் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பெட்ரோல் விலையை குறைத்த பாகிஸ்தான் :

பாகிஸ்தானில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், 80 ரூபாயை குறைத்து ஒரு லிட்டர் பெட்ரோல் 378 ரூபாயாக நிர்ணயிக்கப் போவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் அறிவித்துள்ளார்.

இந்த விலை குறைப்புக்கான நிதி ஆதாரம், அரசின் பெட்ரோலிய வரியின் மூலம் ஈடு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டி, எரிபொருள் விலையை குறைந்தபட்சம் 43 சதவீதம் உயர்த்தியிருந்த நிலையில், மக்களின் வேண்டுகோளை ஏற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேட்டோ அமைப்பை கடுமையாக சாடிவரும் டிரம்ப் : 

ஈரான் போர் தொடர்பாக நேட்டோ கூட்டணியை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாகச் சாடி வரும் நிலையில், நேட்டோ தலைவர் மார்க் ரூட்டே அடுத்த வாரம் வாஷிங்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரூட்டே ஏப்ரல் 8 அன்று டிரம்பைச் சந்திப்பார் என்றும், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புத் தலைவர் பீட் ஹெக்ஸெத் ஆகியோரையும் சந்திப்பார் என்றும் நேட்டோ தெரிவித்துள்ளது. இச்சந்திப்பின் போது போர் நிறுத்தம், ஹோர்முஸ் நீரிணை திறப்பு உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்படலாம் என தகவல் கசிந்துள்ளது.

பாகிஸ்தான் வருவதற்கு ஈரான் மறுத்துள்ள அதிர்ச்சி :

அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாகிஸ்தான் வருவதற்கு ஈரான் மறுத்துள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர்நிறுத்தத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் இரு தரப்பையும் அணுகி இஸ்லாமபாத்தில் பேச்சுவார்த்தை நடத்த விழைந்தது.

ஆனால், பாகிஸ்தானின் முன்னெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிகள் எவ்வித முன்னேற்றத்தையும் எட்டாமல், ஈரான் பேச்சுவார்த்தை அழைப்பை நிராகரித்துள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக பாஜக என்னை பரிந்துரைக்கவில்லை - அண்ணாமலை

9
38 mins agoshare
அண்ணாமலை பேட்டிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved