பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகளை பிடிக்க மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டனர். அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் தொடங்கி வைத்த இந்த போட்டியில் 600க்கும் மேற்பட்ட காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். காளைகளை அடக்க மாடுபிடி வீரர்களும், அடங்க மறுத்து காளைகளும் போட்டி போட, வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு கட்டில், பீரோ உள்ளிட்டவை பரிசுகளாக வழஙகப்பட்டன.