திருச்சி மாவட்டம் தொட்டியம் அரசு பள்ளி மாணவி, 30 நொடியில் 45 செங்கல்களை உடைத்து சாதனை படைத்தார். தொட்டியம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்1 படிக்கும் ஸ்ரீமதி, 30 நொடியில் இரண்டு கிலோ எடையுள்ள 45 செங்கற்களை உடைத்தார். இதனை உலக சாதனையாக அங்கீகரித்து ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட் அமைப்பு சான்றிதழ் வழங்கியது.