தரிசிக்க கடைசி நாள் என்பதால் கூட்டம் : கும்பகோணம் பிரம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் மிகவும் பழமையான ஸ்ரீதேவி பூமிதேவி சமேத அத்திவரதர் சிலை உள்ளது இது பாதாள அறையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் அத்திவரதர், 1915 ஆம் ஆண்டு காட்சி கொடுத்த பின்பு பாதாள அறையில் வைக்கப்பட்டது. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் 98 ஆண்டு காலம் வெளியே எடுக்காமல் இருந்த நிலையில், கடைசியாக கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிய எடுக்கப்பட்டு.பக்தர்களுக்கு 3 நாட்கள் காட்சி கொடுத்த பிறகு மீண்டும் பாதாள அறையில் வைக்கப்பட்ட அத்திவரதர், கடந்த ஒன்றாம் தேதி மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். பத்து தினங்களுக்கு பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சி கொடுப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கடைசி தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரம் கணக்கான பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனிடையே கடந்த ஒரு வார காலமாக கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இன்று திடீரென மழை பெய்தது மழையில் நனைந்தபடியும் கொடை பிடுத்தபடியும் வரிசையில் வந்து அத்தி வரதரை தரிசனம் செய்து வரும் பக்தர்கள். Related Link அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன