நெல்லை மாவட்ட சிபிசிஐடி டிஎஸ்பி வீட்டில் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பாளையங்கோட்டை டக்கம்மாள்புரம் சக்தி நகரை சேர்ந்த சிபிசிஐடி டி.எஸ்.பி ராஜ்குமார், கோவையில் படித்து வரும் மகளை பார்ப்பதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கொண்ட மர்ம நபர்கள், கதவை உடைத்து, நகை, பணம் ஆகியவற்றை திருடி சென்றனர்.