சென்னையில் பாலிஹோஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் 4-ஆவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாகக் கூறி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பாலிஹோஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். இந்த சோதனை 4-வது நாளாக நீடித்து வரும் நிலையில், கிண்டியில் உள்ள பாலிஹோஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் தலைமை அலுவலகம், அபிராமபுரத்தில் உள்ள இயக்குநர் யூசுப் சபீர் என்பவர் வீடு, பெசன்ட் நகரில் உள்ள மற்றொரு இயக்குநரின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.