ராமநாதபுரம் மாவட்ட பாஜகவில் உட்கட்சி பூசல் காரணமாக, தேர்தல் ஒப்புதல் படிவங்களை கிழித்தெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய பாஜக தலைவருக்கான தேர்தல் மருதகம் கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. அப்போது, மாவட்டத் தலைவர் தரணி முருகேசன், தனது ஆதரவாளர் மோகன்தாஸுக்கு முன்மொழிந்து 20 கிளைத் தலைவர்களிடம் கையொப்பம் பெற்றதாக அறிவித்தார். ஆனால், தங்களிடம் ஏமாற்றி கையொப்பம் பெற்றதாகக் கூறி கிளைத் தலைவர்கள் தேர்தல் ஒப்புதல் படிவத்தை கிழித்தெறிந்து, தேர்தல் பொறுப்பாளர் ரமேஷ்பாபுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது.