இந்திய சைகை மொழி தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. செப்டம்பர் 23 முதல் 29 வரை, செவித்திறன் குறைபாடு உடைய மாற்று திறனாளிகளின் இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காது கேளாதோர் தினமாக கடைப்பிடித்து வரப்படுகிறது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஆட்சியர் பிரதாப், விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக செவித்திறன் குறைபாடு உடைய மாற்று திறனாளிகளுக்கு ஆட்சியர், மலர்களை கொடுத்து மகிழ்வித்து பின்பு, சைகை மொழியில் உரையாடினார். மஞ்சப்பைகளில் ஆப்பிள், குடிநீர், சத்துமாவு அடங்கிய பொருட்களை அனைவருக்கும் வழங்கினார் இந்த பேரணியில், செவி கேட்காவிட்டாலும் கைகள் பேசட்டும், கற்போம் கற்போம் சைகை மொழியினை கற்போம் போன்ற பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணி சென்றனர்.