ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், சாலை மார்க்கமாக ராமேஸ்வரத்திற்கு சென்றார். அங்கு அப்துல் கலாமின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.