கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 928 கன அடியாக அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெய்து வரும் கனமழையால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கேஆர்பி அணைக்கு வினாடிக்கு 500 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 928 அடியாகவும், நீர் இருப்பு 50 அடியாகவும் உயர்ந்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்கள் ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.