தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமைக்கபட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர் எத்தலப்பர் திருவுருவ சிலை மற்றும் மணிமண்டபத்தை திறந்து வைத்ததை அப்பகுதி மக்கள் தேவராட்டமாடி உற்சாகமாக கொண்டாடினர். நகராட்சி அலுவலகம் அருகில் நிறுவப்பட்டுள்ள எத்தலப்பர் திருவுருவ சிலையினை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சியின் வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனையொட்டி, அங்கு அங்கிருந்த மக்கள் பட்டாசு வெடித்தும், தேவராட்ட நடனமாடியும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.