தென்காசி நகராட்சியில் 28 லட்சம் ரூபாய் பணம் கையாடல் செய்ததாக, இளநிலை உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ராஜா முகமது என்ற அந்த நபர், நகராட்சியில் வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், நகராட்சி பணத்தில் கையாடல் செய்ததாக புகார் கூறப்பட்டதை தொடர்ந்து, அதிகாரிகள் மத்தியில் விசாரணை நடத்தப்பட்டு கணக்கு வழக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், 28 லட்சம் ரூபாய் கையாடல் செய்தது தெரியவந்ததை அடுத்து, இளநிலை உதவியாளர் ராஜா முகமதுவை பணியிடை நீக்கம் செய்து நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.