news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews "நான் சிலிண்டர் தருகிறேன்"
tv

Also Watch

tv

Read this

"நான் சிலிண்டர் தருகிறேன்"

நயினார் நாகேந்திரன் புது விளக்கம்

22

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாட்டில், எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என்று, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக கூறி உள்ளார்.

முழுக்க முழுக்க பொய்
திருச்சியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது;
தமிழ்நாட்டில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என்பது முழுக்க முழுக்க முதல்வர் சொன்ன பொய். ஒருவருக்கு ஒரு சிலிண்டர் கொடுத்தபிறகு 20 நாட்களுக்குப் பிறகே மீண்டும் முன்பதிவு செய்ய முடியும். கணினி தொழில்நுட்பமே அப்படித் தான் உள்ளது.

நான் தருகிறேன்
ஏனென்றால், நான் கேஸ் விநியோகஸ்தர், அதனால் தான் சொல்கிறேன். தட்டுப்பாடு என்பது எங்குமே இல்லை. 20 நாட்களில் உங்களுக்கு சிலிண்டர் வேண்டும் என்றால் நான் தருகிறேன். உங்களுக்கு எங்கு வேண்டுமோ, அங்கு நான் தருகிறேன். ஓட்டல்களில் உணவு வகைகளை குறைத்ததற்கும், எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடுக்கும் எந்த தொடர்பும் இல்லை. உலகப் போரால் இந்தியாவில் பொருளாதார கட்டுப்பாடோ, நெருக்கடியோ ஏற்படவில்லை. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால், வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கிடைக்கும் கச்சா எண்ணெய் தடை பட்டுள்ளது. இதனால், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை கொடுக்கவும், சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்கவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.


Related Link
முழுவீச்சில் அம்மா உணவகங்கள் இயங்க வேண்டும் - இபிஎஸ்

முழுவீச்சில் அம்மா உணவகங்கள் இயங்க வேண்டும் - இபிஎஸ்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
12 hrs 29 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved